
சென்னை, ஜுன் 14
இந்திய அரசால் வழங்கப்படும் உணவு தொகை வழங்காததை கண்டித்து இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு தப்பிவர முயன்ற இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பொலிஸா கைது செய்தனர்.
இதில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவரும் அவர்களது இரு குழந்தைகளுடன் மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு தினசரி வழங்கப்படும் உணவு தொகையான 175 ரூபாய் மண்டபம் அகதிகள் முகாம் நிறுத்தப்பட்டதால் இன்று காலை முதல் இவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.