
இலங்கை மீது ஜப்பான் முழுமையான நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
இலங்கைக்கு ஜப்பான் குறுகிய கால கடன் வசதியை வழங்க வேண்டுமானால், சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.
இல்லையேல், அரசாங்கம் கோரும் கடன் வசதிகளுக்கான உடன்படிக்கைகளில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் கையெழுத்திட மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்திய கடன் தொடர்பில் கருத்துரைத்த ஹர்ஷ டி சில்வா, “இந்தியக் கடன் ஊடான எரிபொருள் ஏற்றுமதி ஜூன் 17 ஆம் திகதி இலங்கையை வந்தடையும். எனினும் நங்கூரமிடப்பட்டுள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை இலங்கை செலுத்தவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்