
கொழும்பு, ஜுன் 14
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளன மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க சம்மேளன மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார். நாட்டில் மக்கள் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் எவ்வாறு இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நாள் கணக்கில் வரிசைகளில் காத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.