
கண்டி, ஜுன் 14
மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
போட்டியில் மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வெத்-லூயிஸ் முறைப்படி அவுஸ்திரேலியா அணிக்கு 44 ஒவர்களில் 282 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.