தலதா மாளிகையின் பெயரை பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை ஒன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கும் தலதா மாளிகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகையை அமைக்கும் போது அதற்கு மேல் பூஜை நடத்தும் நடவடிக்கை ஆரம்ப காலம் முதலே முன்னெடுக்கப்படுகின்றமை ஒரு மரபு நடவடிக்கையாகும்.
எனினும் புதிய பூஜைகள் என கூறி தலதா மாளிகை மற்றும் அதற்கு சமமான பெயரை பயன்படுத்தி மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாராவது தலதா மாளிகையின் பெயரை பயன்படுத்தி கதைத்தால் அவர்களுடனான பேச்சை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிற செய்திகள்