நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குமுன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் சற்றுமுன் எரிபொருள் வழங்குமாறு கோரி தெஹிவளையில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்ற வருகின்றது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் கொழும்பு- காலி வீதியில் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தற்போது குறித்த பகுதியில் ஏராளமான பொலீஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பிற செய்திகள்