
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இரு பெண்கள் வாழைத்தண்டினை மூலப்பொருளாகக் கொண்டு கைப்பணி உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.
குறித்த கைப்பணி உற்பத்தி பொருட்களாக சிறிய கைப்பை, தொப்பிகள், புத்தக அட்டை, கடதாசி போன்றன தயாரிக்கப்படுகின்றன.
இது குறித்து உற்பத்தி செய்கின்ற பெண் ஒருவர் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,
கைப்பணி உற்பத்திக்கென பயிற்சிக்கு வந்து இந்த தொழிற்சாலையிலேயே 9 வருடங்களாக பணி புரிந்து வருகிறேன்.
எங்களின் உற்பத்திப் பொருட்களின் விலை கூடியளவாக இருப்பதால், எமது உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தல் என்பது குறைவாக உள்ளது. அதனுடன் விற்பனையும் இல்லை. சுற்றுலாப்பயணிகள், பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாட்டவர் போன்றோர் ஓடர் செய்தால் அதனை செய்து கொடுப்போம்.
மூலப்பொருட்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளை ஏற்றுமதி என்பது பிரச்சனையாக உள்ளது. உற்பத்திக்காக செலவிடும் கூலிப்பணத்தினையே பெறக்கூடிய நிலையும் இல்லை.
இந்த உற்பத்தி நிலையத்தில் இரு பெண்கள் மாத்திரமே பணி புரிகிறோம். உற்பத்திப் பொருட்களை கூடியளவு விற்பனை செய்து வருமானத்தினை பெறக்கூடியதாக இருந்தால் இந்த தொழிற்சாலையில் 30 க்கும் மேற்பட்டோருக்கு தொழிழ் வாய்ப்பு வழங்கக் கூடிய வாய்ப்பு இருக்கும்.
பொருட்களை பின்னி தயாரிப்பதற்கு மெசின் இருந்தால் உற்பத்திப்பொருட்களின் விலையினை குறைக்க கூடியதாக இருக்கும். இலங்கை ஏற்றுமதி அதிகார சபைக்கும் தெரிவித்திருந்தோம். எங்கு தேடியும் குறித்த மெசின் இன்னும் கிடைக்கவில்லை. மெஷின் இல்லாத காரணத்தினால் நேரம் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. என்றார்.
https://www.facebook.com/samugamweb/videos/548464603530308
பிற செய்திகள்