
கொழும்பு, ஜூன் 15
ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொண்டு ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரயில்வே பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் சில ரயில் பாதைகளில் புதிய ரயில்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 06.20 மணிக்கு வக ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு புதிய ரயில் ஒன்று இயக்கப்படவுள்ள நிலையில், மாலை 04.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து குறித்த ரயில் வக ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
மேலும் பல ரயில் பயணங்களுக்காக புதிய ரயில்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.