செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் அல்லது சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு செயற்கையானது என அதன் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, அரிசியை மறைத்து அதிக விலைக்கு விற்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அலுவலக நேரத்தில் 1977 என்ற குறுகிய எண்ணில் முறைப்பாட்டை தெரிவிக்கலாம்.
நுகர்வோர் அதிகார சபையின் மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண உதவிப் பணிப்பாளர்களிடம் 077 1088 895 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 077 1088 914 என்ற இலக்கத்துக்கும், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 077 1088 903 என்ற இலக்கத்க்கும் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில் 077 1088 902 மற்றும் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறைப்பாடுகள் தொடர்பில் 077 1088 904 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
பிற செய்திகள்