மட்டு தமிழ் உணர்வாளர் மைப்பின் தலைவர் க. மோகனுக்கு  29 திகதி வரை  தொடர்ந்து விளக்மறியல்  

மட்டு தமிழ் உணர்வாளர் மைப்பின் தலைவர் க. மோகனுக்கு  29 திகதி வரை  தொடர்ந்து விளக்மறியல்  

(கனகராசா சரவணன்;)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும்  29 திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர்  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 மே மாதம் 3ம் திகதி  தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்பட்ட மோகனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட் அவரை தொடர்ந்து எதிர்வரும்; 29 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

Leave a Reply