நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே காத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்குமிடையே ஆங்காங்கே பல்வேறு வாக்குவாதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்து இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆக உயர்வடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் எட்டு பேர் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்ததால் உடல்நிலை மோசமானதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்