
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகள் , அரச நிர்வாக அலகுகளை சீர்செய்வது , பதுக்கல்கள் வியாபாரம் ,விலைக்கட்டுப்பாடு போன்றவற்றினை மையப்படுத்தி நாளையதினம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளிப்பதற்காக கையெழுத்துப் போராட்டத்தினை நடாத்த உள்ளோம் என தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்துள்ளார் .
இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியல் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியிருந்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 .00 மணியாளாவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை நடாத்த உள்ளோம் .
இந்த போராட்டமானது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க உள்ளோம்.
இதன் தலைப்பாக ”மக்களை பட்னிச் சாவிலிருந்து மீட்போம் ” எனும் தொனிப்பொருளில் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து துண்டுப்பிரசுரத்தை வெளியிட உள்ளோம் .
எனவே இந்த போராடத்தில் யாழிலுள்ள அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள் ,அரசியல் தலைவர்கள் ,பிரதேசபை உறுப்பினர்கள் ,பொது மக்கள் ஆகியோர் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
பிற செய்திகள்





