தமிழ்நாட்டில் தங்கத்துடன் இலங்கை பிரஜை கைது!

சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் 9.85 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான இரண்டு கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுங்கத் திணைக்களம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், மும்பையில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பயணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவரது சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 மூட்டை வெளிநாட்டு தங்க பேஸ்ட்டை மீட்டனர்.

98.55 லட்சம் மதிப்பிலான 2.13 கிலோ எடையுள்ள தங்கம், இந்திய சுங்கச் சட்டம், 1962ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply