ஹிந்தி திரைப்படத்தில் இடம்பிடித்த யொஹானியின் பாடல்!

உலகளவில் புகழ்பெற்ற இலங்கைப் பாடகி யொஹானியின் பாடல் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

சிங்கள பாடலான ‘மெனிகே மகே ஹிதே’ ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

‘கடவுளுக்கு நன்றி’ என்ற திரைப்படத்தில், அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.

மெனிகே மகே ஹிதே பாடலின் இந்தி பதிப்பை இந்திய பாடலாசிரியர் ராஷ்மி விராக் எழுதியுள்ளார்.

மேலும், தனிஸ்க் பாச்சி இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply