சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவப் பட்டம்!

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அஸ்கிரி மகா விகாரையினால் கௌரவப் பட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

“மஹாமான்ய பிரதபாதிகேஷ்வர” என்ற கௌரவப் பட்டமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அஸ்கிரி மகா விகாரையின் அபினந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாடு, மதம் மற்றும் தேசிய பாதுகாப்புக்காக ஆற்றிய சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply