
கொழும்பு, ஓக 29
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மாவின் விலையானது ஒரு கிலோ கிராமுக்கும் 350 ரூபா என்ற மட்டத்தில் காணப்படுகிறது. இந்த நிலைமை காரணமாக பாண் உட்பட வெதுப்பக உணவுகளின் விலைகளில் மீண்டும் திருத்தம் செய்ய நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 170 ரூபா முதல் 190 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு இறத்தல் பாணின் விலையை 250 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.



