ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல்

<!–

ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல் – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமக்கு வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான அரசாங்கத்தை ஜனாதிபதி நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply