மீண்டும் நீக்கப்படும் மத்திய வங்கி ஆளுநர்?

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கீர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தமக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரை நீக்கிவிட்டு தினேஷ் வீரக்கொடியை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கு ஏதாவது ஏற்பாடுகள் உள்ளதா என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply