கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவத்துகொட பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில், றஞ்சன் ராமநாயக்க பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஒன்றரை வருடமாக தவறவிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலைக்கு வருகை தந்தேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்



