மக்கள் தகவல் பெறுவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தொலைபேசி எண்கள் அறிமுகம்!

அரச நிறுவனங்களுக்கு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வரும் மக்களுக்கு வினைத்திறன் மற்றும் விரைவான சேவையை வழங்குவது கட்டாயம் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று அறிவித்தார்.

பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் முதன்மையான பொறுப்பாக இருப்பதால், எந்தவொரு நபருக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில் வினைத்திறனான சேவையை வழங்கி அனைத்து அமைச்சுகளிலும் அரச நிறுவனங்களிலும் பதில் வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

மக்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு வசதியாக பல தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிசிர ஹேனதீர (ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், சட்டம்)

கைப்பேசி:- 0718132590

அலுவலக தொலைபேசி:-0112354329 / 0112354354

கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன (ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்)

கைப்பேசி:- 0719994133 / 0711992354

அலுவலக தொலைபேசி:- 0112354329 / 0112354354

மின்னஞ்சல் முகவரி:- [email protected]

பிற செய்திகள்

Leave a Reply