வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் அரச ஊழியர்கள்! சபையில் அமைச்சர்

365 நாட்களில் அரச ஊழியர்கள் 191 நாட்களே தமது கடமைகளை மேற்கொள்வதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் சேவையில் 45 ஊதிய விடுமுறைகள் உள்ளன. அண்ணளவாக 149 பொது விடுமுறைகள் உள்ளன. அதன்படி, சராசரியாக 365 நாட்களில் 191 நாட்களே அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

மிகவும் தீவிரமான பிரச்சினை உள்ளது. இந்தத் தயாரிப்புகளை மிக விரைவில் விசாரிக்குமாறு உற்பத்தித்திறன் செயலகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்.

தங்கள் இலக்குகளுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பைக் கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதியும் கூறியுள்ளார். என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply