சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (05) நண்பகல் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 250 பேர் வரையிலானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அந்தநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.