முட்டை 60 ரூபாய்; மாணவர்களுக்கு எவ்வாறு மதிய உணவை வழங்குவது? – கல்வி அமைச்சர் கவலை

நாட்டில் மாணவர்களின் போசாக்கு மட்டம் குறைந்து செல்வது உண்மை. ஆனாலும் நாம் மாணவர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை கை விடவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய அவர்,

பல அமைப்புகளிடம் கலந்துரையாடி வருகின்றோம். ஆரம்பத்தில் மாணவர் ஒருவருக்கு மதிய உணவுக்காக 30 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

அதன் பின்னர் தற்போது 60 ரூபாய் ஒத்துக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கம் போதாது. முட்டை ஒன்றின் விலை இப்போது 60 ரூபா.

இந்த நிலையில் எவ்வாறு 60 ரூபாயில் மதிய உணவை வழங்குவது. என்றாலும் நாம் முயற்சியை கை விடவில்லை. ஆரம்ப பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply