கௌரவமான அரசியல் தீர்வுக்கோரி அம்பாறையில் போராட்டம்!

மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம் அம்பாறையில் இன்று நடைபெற்றது.

100 நாட்கள் செயல் முனைவு மக்கள் குரல் அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர்க் ஏத்தம் பகுதியில் இன்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 38 ஆம் நாள் போராட்டம் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *