சிமெந்து, கம்பிக்கு நிர்ணய விலை ?

கட்டுமானப் பொருள்களான சிமெந்து மற்றும் கம்பி ஆகிய முக்கியமான பொருள்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து கட்டுமானத் தொழில் துறையில் பொருள்களுக்கான விலை உயர்வடைந்தது.

இந்தநிலையில் பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியால் வர்த்தக அமைச்சருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் வரை அரச மற்றும் தனியார் விநியோகஸ்தர்களால் விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சிமெந்து மூடையின் சராசரி விலை 187 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதன்படி இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 98 சதவீதம் அதிகரித்துள்ளது என கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply