உங்களை நம்பி உரம் தர மாட்டோம் – கை விரித்த முக்கிய தரப்பு

உலக சந்தையில் இருந்து உரம் கொள்வனவு செய்வதில் இலங்கையின் விவசாய அமைச்சு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் இருப்பு பற்றாக்குறையை காரணம் காட்டி சில உர விநியோகஸ்தர்கள் உரத்தை வழங்க மறுத்துள்ளனர்.

அத்துடன் உரம் கொள்வனவு செய்வதில் இலங்கை முன்வைத்த நிபந்தனைகளுக்கு சர்வதேச உர விநியோகஸ்தர்கள் உடன்பட மறுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், 10,000 மெட்ரிக் தொன் உரம் அமைச்சிடம் கையிருப்பு இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply