கம்பஹா கடற்கரையில் மர்மமான முறையில் கரையொதுங்கும் உயிரினங்கள்!(படங்கள் இணைப்பு)

பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலத்தில் 3 ஆமைகள், 1திமிங்கலம்,1 டொல்பின் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தின் பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் ஆமை ஒன்று  இன்று காலை கரை ஒதுக்கி உள்ளது.

நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த ஆமை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

 இந்த  கடற்கரையில் இருந்து 8 கடல் மை தூரத்தில் மூழ்கிய நிலையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் ஒரு பகுதி தெரிகிறது.  

இந்த கடற்கரை ஓரத்தில் கடந்த ஒரு வார காலத்தில் இறந்த நிலையில்  மூன்று ஆமைகளும் திமிங்கலம் ஒன்றும் , டொல்பின் ஒன்றும் கரை ஒதுங்கி உள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply