தியாக தீபங்களின் தியாகங்களை மதிக்காதவர்கள் அரசியலுக்கு தேவையில்லை!

கடந்த வாரம் தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் விழாவிலே இரண்டு அமைப்புக்களுக்கு இடையில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனை தமிழ் மக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என வலி மேற்கு சமூக மேம்பாட்டு இணைய இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இளைஞர் அணியின் பிரதிநிதிகள்,

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் விழாவிலேஇந்த இரு அமைப்புக்கள் சண்டை இடுவது என்பது மக்கள் மத்தியில் வேடிக்கைத் தனமான விடயமாக அமைந்திருக்கின்றது.

அந்த உன்னதமான மனிதனுடைய பெயரினை வைத்து அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக அரசியல் செய்து வருகிறார்கள்.தமிழர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியவர்கள்,அந்த மனிதனின் நினைவிடத்தில் ஒரு சம்பவத்தினை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் இது தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

அந்த இரு அமைப்புகளான மணிவண்ணனுடைய அமைப்பும் ,தமிழ் தேசிய காங்கிரஸின் அமைப்பு ஆகியவற்றுக்கிடையில் இந்த முரண்பாடு ஏற்பாட்டிருக்கிறது என அறிந்திருந்தேன்.

இனி வரும் காலங்களில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலம் இந்த காலமாகும்.தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு தங்குடைய சுயலாபத்தினை கருத்தில் கொன்டு தியாக தீபங்களுடைய தியாகங்களை மதிக்காதவர்கள் அரசியலுக்கு அவர்கள் தேவையில்லை.

இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் கவனம் எடுக்க வேண்டிய சூழல் இருக்கின்றது.இதனை நன்றாக உணர வேண்டும்.ஒரு மாவீரனின் புனிதத்தை மதிக்கத் தெரியாதவர்கள் இந்த அரசியலில் இருக்கின்றார்கள்.

இவ்வாறு மதிக்கவேண்டிய உன்னதமான மாவீரனின் தாயார் அந்த இடத்தில் அவமதிக்கப்பட்டிருந்தார்.இது வேதனைக்குரிய விடயமாகும்.இதனை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் தேசத்திற்காவும்,தமிழ் இனத்திற்காகவும்,சுயநிர்ணய உரிமைக்காவும் போராடிக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மறு புறத்தில் முன்னாள் போராளிகளையும் ,மாவீரர்களையும் கொச்சப்படுத்துகின்ற விதமாக நடந்துகொள்கின்ற விடயத்தினை வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயமாகும் .

எனவே இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் ,இவ்வாறான அரசியவாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட் வேண்டும் என கூறிக்கொள்கிறேன். தமிழ் மக்களிடையே ஒரு ஒற்றுமை இல்லாமல் நாங்கள் பிரிந்து பிரிந்து சென்று எங்களிடையே ஒரு பிளவினை ஏற்படுத்துகின்ற விதமாக இந்த அரசியல்வாதிகள் நடந்துகொள்கிறார்கள்.என்றார்.

மேலும், தங்கள் உயிரினை தியாகம் செய்த மாவீரர்களை வைத்து , தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதை நான் வன்மையாக கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *