திருகோணமலையில் நீரில் மூழ்கி பலியான நபர் : வெளியான காரணம்!

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் இன்று (19.09.2022) உயிரிழந்துள்ளார்.

திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் சுப்பிரமணியம் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கிய நிலையில் குறித்த நபர் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *