கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கை- இந்தியா பேச்சு

கொழும்பு, செப். 21: கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கை- இந்தியா நாடுகள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் கடனுக்காக ஆரம்ப ஒப்பந்தத்தை இலங்கை எட்டியது. இந்நிலையில், இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருந்தது.

இந்த சூழலில், கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கை- இந்தியா நாடுகள் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளன.

Leave a Reply