யாழில் இன்றைய தினம் சர்வதேச சமாதான தினத்தினை முன்னிட்டு மகளிர் அமைதிப் பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த அமைதிப்பேரணியானது மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்,இன்று காலை 9.30 மணி அளவில் , யாழ்ப்பாணம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்னால் இடம்பெற்றிருந்தது.
வாழ்வின் ஆதாரம் அமைதி – இவ் அமைதி ஒவ்வொருவரின் உள்ளத்திலும்,இல்லத்திலும் முழு உலகிலும் மலரட்டும் ,சாதி,இன,மொழி பேதமின்றிய அமைதி உள்ளமெங்கும் மலரட்டும் ,அமைதிப் பூக்கள் மலரட்டும் வன்முறைகள் ஒழியட்டும் போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு இந்த அமைதிப்பேரணி நடைபெற்றிருந்தது.
மேலும் குறித்த பேரணியில் பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.







