மீனவ மற்றும் கரையோர மக்களுக்கு ஒரு அறிவிப்பு!

அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும், கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி தொடக்கம் கொழும்பு ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply