புத்தளத்தில் நகை, பணம் கொள்ளை! பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்

புத்தளம் தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் திருடர்களால் வீடு உடைக்கப்பட்டு நகைகள், பணம் மற்றும் கையடக்க தொலைப்பேசி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் வீட்டில் இல்லாத நேரத்தில் சமயம் பார்த்து கொள்ளையடித்துள்ளதாகவும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாக வீட்டார் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 அரை பவுன் தங்க ஆபரணங்கள், 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணம் மற்றும் விலை உயர்ந்த ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசியொன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் மோப்ப நாய்களை விட்டு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குதித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply