பளையில் பாம்புக் கடிக்கு இலக்கான பெண் மரணம்

பளை, ஓக.03

பாம்புக் கடிக்கு இலக்கான பெண் ஒருவர் இன்று (03)காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பளை-இந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மூன்று தினங்களுக்கு முன்பாக பாம்புக் கடிக்கு இலக்காகி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது வழியில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply