
சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் ஏனைய நலக்கொடுப்பனவுகளை சீர்செய்வதற்கு கியூஆர் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த நடைமுறையின் கீழ் சமுர்த்தி பயனாளிகளைத் தவிர, அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் ஏனையோரும் இணைத்துக்கொள்ளப்படுவர் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரசின் நலன்புரி மானியங்களை வழங்குவதற்கு தகுதியானவர்களைக் கண்டறியும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கிலும் நலக்கொடுப்பனவுகள் தேவைப்படுவோரை அடையாளம் காணவும் மற்றும் அவற்றை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்த கியூஆர் நடைமுறை உதவும் என நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது





