
2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகின்றது.
அதன்படி முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும் (ஒக் 4) வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (ஒக். 5) அதைத் தொடர்ந்து பிற துறைகளுக்கான நோபல் அறிவிப்புகளும் வரவுள்ளன.





