போராட்டத்தில் குதித்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்னறுவையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

உடமைகளை அடகு வைத்துள்ள விவசாயிகள், தமது சொந்த விளைச்சல்களை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் வரலாற்றில் மிக மோசமான அவலத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்று விவசாயிகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவும் கலந்துகொண்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply