மலையகத்தில் 3000 வீடுகள் மண்சரிவு அபாயத்தில்

மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (03.10.2022) கொழும்பில் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்த காளியம்மா இன்று உயிரிழந்ததைப் போன்று, நாளை மண்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இது தொடர்பில் அரசுடன் கதைத்துள்ளேன்.

மேலும் காணி அமைச்சர் ஹரீனுடனும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்கொண்டு பேசியுள்ளேன். அவர் இதற்கு உடனடியாக தீர்வை எடுக்க வேண்டும் என்றும் ஏனெனில் நாட்கள் செல்ல செல்ல இதன் ஆபத்து அதிகம்.

பாடசாலையில் நடைபெறும் விழாக்களுக்கு மாணவர்களிடம் பணம் அறவிடுதல் முறையாகாது. மாணவர்கள் அடித்து துன்புறுத்துவதை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு விடயமாகும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply