இந்திய- இலங்கை இடையிலான உறவுகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்தலாம் என்பது குறித்து இரு நாடுகளினதும் நிதியமைச்சர்களும் சந்தித்து ஆராய்ந்துள்ளனர்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பசில் ராஜபக்ச இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளைநடத்தியுள்ளார்.
இந்தியாவுடனான பொருளாதாரஉறவுகளை மேலும் ஆராய்வதற்காக வழிவகைகள் குறித்து இந்தியாவிற்கான விஜயமொன்றை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளினதும் நிதியமைச்சர்கள் ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன்இ பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் இந்தியா வழங்கிய உதவிகளிற்காக பசில் ராஜபக்ச தனது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






