தனிநபர் ஒருவரின் ஏரி எம் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை இருவர் கொள்ளையிட்டுள்ளனர்.
அவர்களைத் தேடும் முயற்சியில், இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உரும்பிராயில் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் ஏரி எம் அட்டை காணாமற்போனமை தொடர்பில் அவர் அறிந்திருந்த நிலையில் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளது.
அதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவியுடன் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பான ஒளிப்படங்களைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொதுமக்களின் உதவியைக் கோரி சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 0718591329 என்ற அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.





