திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

<!–

திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல் நீடிப்பு – Athavan News

வர்த்தகர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் இருந்து பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசாரணைகளின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்களை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply