இலங்கையில் கல்லூரி மாணவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

இலங்கை கெலனிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அண்மைக் காலங்களில் நாட்டில் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்ட கெலனிய பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதால் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு இருந்தனர். கெலனிய பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்பு நகர் மத்தியை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்ற போது பொலிசாரால் இடை மறிக்கப்பட்டதால் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில், பல்கலைக் கழக தலைமை குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் மற்றும் பௌத்த மாணவர்கள் சங்க தலைவர் ஆகியோர் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என பல தடவைகள் மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்திருந்த நிலையில் தற்போதைய நடவடிக்கைகள் மேலும் மக்களது ஆத்திரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply