அரிசியில் விஷமா ? இலங்கையில் சிக்கிய மர்மப் பெட்டி

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான  களைக்கொல்லி மற்றும் கெப் வண்டியொன்று   
 ஆலங்குடாவ பிரதேசத்தில் இன்று  மீட்கப்பட்டதாக நுரைச்சோலை  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு  தடைசெய்யப்பட்ட களைக்கொல்லி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  பொலிஸாரால் இதுவரை  கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான களைக்கொல்லிகள் இது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த களைக்கொல்லியானது இலங்கையில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட ஒரு களைக்கொல்லி எனவும், அது மிகவும் பாதுகாப்பாக உரப் பைகளில் அடைக்கப்பட்டு மீண்டும் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியை பொலிஸார் கைது செய்வதற்குள் லொறியின் சாரதியான சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சாரதி உதவியாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் 39 பெரிய உர மூடைகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொரு சாக்கு மூடையிலும் மூன்று பெட்டிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெட்டிகளில் தலா 1170 தடை செய்யப்பட்ட களைக்கொல்லி பொதிகள் இருந்ததாகவும், இவை இலங்கை சந்தையில் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply