மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

<!–

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை – Athavan News

வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நாளை மாலை நிறைவடைந்ததும் மாலை 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட 2022.12.03ஆம் திகதிய 2308/62 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளையைப் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக அன்றைய தினம் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *