<!–
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அடங்கிய ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்கு வந்திருந்த நிலையில் தெடர்ந்தும் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான நியூ ஃபோர்ட்ரஸ்க்கு மாற்றியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






