அவுஸ்திரேலியாவை சார்ந்த ஒரு BOI நிறுவனமான  Autogroup International இலங்கையில் தனது 20வது ஆண்டு  நிறைவைக் கொண்டாடுகின்றது

இலங்கை வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான Autogroup International(AGI), இலங்கையில் தனது தயாரிப்பு வரிசையின் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இலங்கை முதலீட்டுச் சபையின் அனுசரணையில் நிறுவப்பட்டு 100 % அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்க இடது பக்க திருப்புச் சக்கர வாகனங்களை வலது பக்கத் திருப்புச் சக்கர வாகனங்களாக மாற்றி  வெளிநாட்டு வாகனச் சந்தையில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

Auto Group International நிறுவனம், 160 இலங்கைப் பணியாளர்களை உள்ளடக்கி சர்வதேச நிபுணத்துவங்களுடன் இலங்கை வாகனத் துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவடை யும் இம் மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,  60 இற்கும் மேற்பட்ட புதிய இலங்கைப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய உத்தேசித்து இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை பாரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், Auto Group International நிறுவனமானது ரூ.2 மில்லியன் பெறுமதியான  ‘பீட்டர் ஹில் புலமைப் பரிசில் திட்டம்’ ஐ நன்கொடையாக வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும் இலங்கையிலும் அதி நவீன உற்பத்தி வசதிகளுடன் கூடிய  உற்பத்தியாளரான Autogroup International, அதன் சிறந்த தானியங்கிப் பொறியியல் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அதி சக்தி வாய்ந்த எஞ்சினைக் கொண்ட ,அதிக செயற்றிறன் மிக்க விளையாட்டு நோக்கக் கார்கள்,பிக்கப் டிரக்குகள்,சொகுசு SUVகள் மற்றும் அனைத்து வகையான  சிறப்பு நோக்க அமெரிக்க வாகனங்ககளையும் இடமிருந்து வலமாகப் பக்க மாற்றம் செய்வதில் உலகளாவிய ரீதியில் முன்னோடியாகத் திகழ்கின்றது.

AGI ஆனது வலது பக்கத் திருப்புச் சக்கர வாகனங்களை உபயோகிக்கின்ற 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர் சார்பாக வாகனமொன்றைக் கொள்வனவு செய்தல், ஏற்கனவே உள்ள வாகனங்களை மாற்றியமைத்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள மொத்த மற்றும் சில்லறை வாகன வாடிக்கையாளர்களுக்கு  கப்பலேற்ற வசதி மற்றும் காப்பீட்டு வசதி என்பவற்றைச் செய்து கொடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு  இத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றது.

தற்போது நிறுவனமானது, Chevrolet Camaro and Silverado, Cadillac Escalade, Lincoln Navigator, Ford F150, F250 and F350, Ford Bronco, Dodge RAM and Challenger, GMC Yukon, Denali and Sierra, Hummer H2 மற்றும் H3 மாடல்களையும் Toyota Tundra போன்ற ஜப்பானிய மற்றும் வட அமெரிக்க மாடல்களையும் மாற்றி அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

Autogroup International இன் ஸ்தாபகரும் இணைத் தலைவருமான பீட்டர் ஹில், இலங்கையில் 20 வருடங்களின் தனித்துவமான பயணம் குறித்துக் கருத்துத் தெரிவிகையில், “20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஆரம்பித்து அண்மைக்காலத்தில் இதனை வெற்றிகரமான வணிகமாக மாற்றியுள்ளோம். இக்காலத்தில் நாமும் பல சவால்களை எதிர் கொண்டோம். சர்வதேச மட்டத்திலான தேர்ச்சியையும் நிபுணத்துவத்தையும் கொண்ட  எமது இலங்கைக் குழுவினாலேயே இந்தச் சவால்கள் அனைத்தையும் முறியடித்து இந்த வெற்றியை எங்களால் அடைய முடிந்தது.”

வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு அமெரிக்க வாகனங்களுக்கு பெறுமதி சேர்க்கும் நோக்கத்துடன் இலங்கை முதலீட்டு சபையின் கீழ் Autogroup International நிறுவப்பட்டது. அதி-நவீன வசதிகளுடன் கூடிய அதன் தயாரிப்புக் கூடம்  நுகர்வோருக்கு எளிதாக அணுகக் கூடியவாறு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்புத் துறைமுகம் என்பவற்றிற்கு அண்மையில் அமைந்த கடுவெல நகரில் நிறுவப்பட்டுள்ளது.

கடுவெல நகரில் அமையப் பெற்றுள்ள அதி-நவீன உபகாரணங்களைக் கொண்ட  தயாரிப்புக் கூடமானது  வெல்டின், வடிவமைப்பு உருவாக்கம், ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக், அபோல்ஸ்டர், உலோகத் தட்டு, ஓட்டோ எலக்ட்ரிக்கல் மற்றும் மோட்டார் இயந்திரவியல் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற  உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பொறியியலாளர்களையும் R&D குழுவையும் உள்ளடக்குகின்றது.

Autogroup International நிறுவனத்தின் நிறைவேற்று இணைத் தலைவர் றொப் ஹில் தனது எண்ணங்களை வெளிப்படுத்துகையில், “சமீபத்தில் எனது தந்தையிடமிருந்து பொறுப்பேற்ற பின்னர், இலங்கையில் 60 புதிய குழு உறுப்பினர்களை உடனடியாக பணியமர்த்துவதன் மூலம் எங்களது திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் சேவையை விரிவுபடுத்த பல மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதும் எமது வருங்காலத் திட்டமாகும்.”

கடந்த 20 வருடங்களாக, இலங்கையில் உள்ள நூற்றுக்கணக்கான திறமையான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் Autogroup International குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றது. கொவிட்-19 தொற்றுப் பரவலின் போது, ​​குழுவின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நிறுவனம் அதன் முழு ஆதரவை வழங்கியது.

AGI இன் நிலையான வளர்ச்சியின் மூலம் கருதப்படுவது என்னவெனில்  இலங்கையின் பொருளாதாரத்திற்கு அமெரிக்க டொலர்களின் முக்கிய பங்களிப்பாளராக நிறுவனம் மாறியுள்ளது என்பதாகும். எதிர்காலத்தில் அதன் தயாரிப்பு வெளியீட்டை அதிகரிக்கவும், இலங்கையில் திறமையான பணியாளர்களை மேலும் மேம்படுத்தவும் உதவுகின்ற ஒரு பெரிய திட்டத்திற்காக மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply