நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை எனவும் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.