மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மன்னம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொண்ட நபர் மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான மின்கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முயன்றபோதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹவெவ – செவனபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மனம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply