திருகோணமலையில் வித்தியாசமான ஆசிரியர் தின கௌரவிப்பு ! samugammedia

திருகோணமலை – இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்காக கற்பித்தலை மேற்கொள்ளும் சிறந்ததொரு ஆசிரியராவார்.

இன்று ஆசிரியர்தினம் என்பதால் , ஆசிரியர் தினந்தோறும் பயணித்து பாடசாலைக்கு வரும் இழுவைப் பாதை படகு சேவைக்கு மாணவர்கள் சென்று மாலையிட்டு ஆசிரியரை வாழ்த்திய சம்பவமானது குறித்த ஆசிரியரின் ஆசிரியத்துவ பணியின் மகத்தான சேவைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கின்றது.

மாணவர்கள் தேடிச்சென்று வாழ்த்திய சம்பவத்தையடுத்து ஆசிரியருக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

Leave a Reply