மருந்து கொள்வனவின் போது பாரிய ஊழல்களும் மோசடிகளும் இடம் பெறுவதாகவும் அவசர மருந்துக்கொள்வனவினால் பெருமளவிலான பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சுக்களின் செயற்பாடுகள் ஒரு பகல் கொள்ளையாக பார்க்கப்படுவதாக அரச மருத்துவ சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் அன்பாஸ் பாருக் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறை முகம் கொடுத்துக்கொண்டு இருக்கின்ற பாரிய நெருக்கடிகள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் தொடர்ச்சியாக மக்களையும் ஊடகத்துறையையும் தெளிவுபடுத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளார்
மேலும் சுகாதாரக்கோளாறின் நெருக்கடியை இரண்டு வகைகளில் அவதானித்துள்ளதாகவும் ஒன்று மனித வளங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சுகாதாரதுறை பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாகவும் மற்றும் பாரிய மக்களுக்கு பிரச்சனையாக இருப்பது மருந்து பொருட்கள் பற்றாக்குறை மருத்துவ உபகரணங்கள் விலை அதிகரித்தமை போன்றனவையாகும் என தெரிவித்துள்ளார்
மேலும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பது சுகாhர அமைச்சின் பொறுப்பாக இருக்கின்றது சுகாதார அமைச்சு இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல் தங்களுடைய கடமைகளை தட்டிக்கழித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும் மனிதவளங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக அரச மருத்துவ சங்கத்தினால் எட்டு முன்மொழிவு அடங்கிய யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை எடுப்பதற்காக தாங்கள் முன்மொழிவை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்
மேலும் மருந்துப்பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக 10 யோசனைகள் அடங்கிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு சுகாதார அமைச்சுக்கு ஒரு முன்மொழிவை எடுத்துசசொல்லுவதற்கு ஒரு இலகுவான வழி காண்பிக்கப்பட்டு இருந்தாலும் கூட தங்களுடைய பிரச்சனைகளில் இருந்து விலகி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு எந்த விதமான நடைமுறையையும் செய்யமால் இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்
மேலும் மருந்து கொள்வனவின் போது பாரிய ஊழல்களும் மோசடிகளும் இடம் பெறுவதாகவும் அவசர மருந்துக்கொள்வனவினால் பெருமளவிலான பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
அண்மையிலே ஒரு போலியான ஆவணத்தை சமர்ப்பித்து மருந்துகளை கொள்வனவு செய்ததாக சுமார் இரண்டு பில்லியன் வரையிலான பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த ஊழலானது ஒருவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமையின் காரணமாக விசாரணைகளை மேற்கொண்ட போதே வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்
மேலும் புற்றுநோய் தொடர்பான மருந்துகளும் போலியான ஆவணங்களின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இவ்வாறான நிலையில் அந்த நாட்டினுடைய மக்கள் உயிர் வாழும் உறுதிப்பாட்டை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்த நாட்டில் எவ்வாறான மருந்துகளை மக்கள் பெற்றுக்கொள்ளுகின்றார்கள் என்ற அறிவு அவர்களுக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
மேலும் இவ்வாறான சுகாதார அமைச்சுக்களின் செயற்பாடுகள் ஒரு பகல் கொள்ளையாக பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார் இதற்கான விசாரணைகள் இடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்
மேலும் போலியான ஆவணங்களை வைத்து மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த கம்பனி மூடப்பட வேண்டும் என்றும் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
இவ்வாறான பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டால் இந்த நாட்டு மக்கள் சுகாதார அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என அரச மருத்துவ சங்கம் சார்பில் தெரிவித்துள்ளார்
ஏதிர் வரும் 25ம் திகதி அரச மருத்துவ சங்கத்தின் தலைமையில் மத்திய குழுக்கூட்டம் இடம் பெறவுள்ளது என்றும் இப் பிரச்சனை தொடர்பில் பொதுமக்களுக்கு சார்பாக குரல் எழுப்பி சுகாதார அமைச்சுக்கு எதிராக குரலெழுப்ப அரசாங்க nதிபர் சங்கம் ஒருபோதும் பின்னிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.